24-ம் தேதி அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்


24-ம் தேதி அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
x

வருகிற 24-ம் தேதி அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகிற 24-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story