சென்னை - விசாகப்பட்டினம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை - விசாகப்பட்டினம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சென்னை எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயிலில் (வண்டி எண்.08557), வரும் 14-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.

மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் சிறப்பு ரெயில் (08558), வரும் 15-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியும், ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story