சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து; 3 பேர் உயிரிழப்பு


சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து; 3 பேர் உயிரிழப்பு
x

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஜீப் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் சென்னை மணலி பகுதியை சேர்ந்த மாலிக் பாஷா உள்பட ஜீப்பில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story