ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு


ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 March 2025 5:39 AM (Updated: 14 March 2025 6:09 AM)
t-max-icont-min-icon

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்

சென்னை,

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு உரிய நிலங்களைக் கையகப்படுத்தி, 2,938 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்கி உள்ளது.

மேலும், சேலம் விமான நிலையத்திற்கென 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story