கூடலூரில் நாயை கவ்விச்சென்ற சிறுத்தை.. மக்கள் அச்சம்


கூடலூரில் நாயை கவ்விச்சென்ற சிறுத்தை.. மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 15 Dec 2024 8:09 AM IST (Updated: 15 Dec 2024 1:52 PM IST)
t-max-icont-min-icon

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. காட்டுயானைகள் விவசாய பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை கவ்வி செல்கிறது. இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் மில்லிகுன்னு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி இழுத்து சென்றது.

இது அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் சிறுத்தை ஊருக்குள் வருவதை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரை வலியுறுத்தி உள்ளனர்.


Next Story