உல்லாசத்திற்கு காதலி; திருமணத்திற்கு வேறு ஒரு பெண்; வாலிபரின் பலே ஆசை

ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று வாலிபர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆலந்தூர்,
ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபரின் பலே ஆசையால் தற்போது கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரிஷி ஜோதிகுமார் (வயது 30). நீலாங்கரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டெக்னிஷியனாக வேலை செய்து வருகிறார். பாலவாக்கத்தில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்தில் வேலை செய்யும் 29 வயது இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக தெரிகிறது.
ரிஷி ஜோதிகுமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததால் இளம்பெண் கர்ப்பமானார். பின்னர் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு கருவை கலைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.அதன்பிறகு ரிஷி ஜோதிகுமார், அந்த பெண்ணுடன் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது, ரிஷி ஜோதிகுமார் அவரை திருமணம் செய்ய மறுத்ததுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து திருமண ஆசைவார்த்தைகள் கூறி தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்த ரிஷி ஜோதிகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி பரங்கிமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண் கூறிய புகார் உண்மையென தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ரிஷி ஜோதிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






