நெல்லையில் சர்வ சாதாரணமாக உலா வரும் கரடி... அச்சத்தில் மக்கள்


நெல்லையில் சர்வ சாதாரணமாக உலா வரும் கரடி... அச்சத்தில் மக்கள்
x

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியில் உலா வரும் கரடி கம்பி வேலியை சேதப்படுத்தி, மரத்தின் மீது இருந்த தேன் கூட்டில் தேனை எடுத்து தின்று மீதியை அங்கேயே விட்டு சென்றது.

இந்த கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி அதே பகுதியில் அதிகாலை நேரத்தில் கரடி உலா வந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் வனத்துறையினர் கரடியை கண்காணிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story