நவம்பரில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம்


நவம்பரில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம்
x

கோப்புப்படம் 

சென்னையில் கடந்த மாதத்தில் 83.61 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் கடந்த நவம்பர் மாதத்தில் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகளும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 06.11.2024 அன்று 3,35,189 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, நவம்பர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 27,50,030 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 599 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,208 பயணிகள், கியுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,62,463 பயணிகள் (Online QR 1,57,016; Paper QR 18,40,921; Static QR 2,24,276; Whatsapp - 5,40,257; Paytm 3,90,030; PhonePe – 2,99,396; ONDC – 1,10,567), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,42,192 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story