தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 82 பேர் காயம் - தீயணைப்புத் துறை தகவல்


தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 82 பேர் காயம் - தீயணைப்புத் துறை தகவல்
x

மதியம் 12 மணி வரை தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தங்களது தீபாவளி வாழ்துகளை பறிமாறிக்கொண்டனர். அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஒருவொருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு இனிப்பு, காரம், முருக்கு, அதிரசம் வகைகளை பறிமாறிக்கொண்டனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் 82 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டத்தில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளாதாகவும் தமிழகம் முழுவதும் பட்டாசு அல்லாமல் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story