போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து


போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து
x

போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது.

இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை. நேற்று மதியத்துக்கு பிறகு ஒரு துளி கூட மழை பெய்யவில்லை. இதையடுத்து ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்து சென்றது. அப்போது சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் எந்த சலனமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், சென்னையில் கனமழை முற்றிலும் நின்று 24 மணி நேரம் கடந்த பிறகும் பயணிகள் பலர் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் போதிய பயணிகள் இல்லாமல் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரவிருந்த 8 விமானங்களின் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் வழக்கமான பயணிகளுடன் விமான சேவைகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story