சென்னையில் த.வெ.க.வினர் மீது 53 பேர் மீது வழக்குப்பதிவு


சென்னையில் த.வெ.க.வினர் மீது 53 பேர் மீது வழக்குப்பதிவு
x

சென்னையில் அனுமதி இன்றி பேனர்கள் வைத்து தொடர்பாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் தனது 51-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளை அவரது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சீரும், சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர். விஜய்யை வாழ்த்தி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைத்தனர். பேனர் வைப்பதில் சில இடங்களில் தகராறும் ஏற்பட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க.வினரால் த.வெ.க.வினர் தாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

உரிய அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்ட இடங்களை போலீசார் ஆய்வு செய்து பேனர்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், த.வெ.க.வினருக்கும் வாக்குவாதம் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றது. இந்த நிலையில் விஜய் பிறந்தநாளையொட்டி அனுமதி இன்றி எங்கெங்கு பேனர்கள் வைக்கப்பட்டது என்ற பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அந்த பேனரை வைத்து நிர்வாகி மீது வழக்குப்பதிவு நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் அனுமதி இன்றி பேனர்கள் வைத்து தொடர்பாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story