சட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக 4 கவுன்சிலர்கள் நீக்கம்

கோப்புப்படம்
மாநகரட்சிகளில் 3 கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சியில் இரு கவுன்சிலர்கள், தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் ஆகியோர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக, 4 கவுன்சிலர்கள் நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையின் 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரத்தில் 40-வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story