24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Dec 2024 12:24 PM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரையும், அவர்களது படகுகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
- 24 Dec 2024 12:06 PM IST
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- 24 Dec 2024 12:02 PM IST
சமத்துவம், சகோதரத்துவம், மானுடப்பற்றை கடைசி மூச்சு வரை போதித்தவர் பெரியார். பெரியாரின் நினைவுநாளில் அவர் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் நினைவுகூர்வோம். தந்தை பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 24 Dec 2024 11:47 AM IST
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று ஒரே நாளில் 1,06 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று 1,06,621 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் நவ 16 முதல் 38 நாட்களில் 30.78 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்தண்டு இதே பூஜை காலத்தில் 26.41 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கூறியுள்ளது.
- 24 Dec 2024 11:10 AM IST
புஷ்பா 2 சிறப்புக்காட்சியின்போது ரசிகை உயிரிழந்த வழக்கில் காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார்.
- 24 Dec 2024 11:03 AM IST
சிகிச்சை, மருந்துகள் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று டெல்லி மருத்துவமனைகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி மீது சுவாதி மாலிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
- 24 Dec 2024 10:55 AM IST
இமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக, 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 174 சாலைகள் மூடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது.
- 24 Dec 2024 10:46 AM IST
கேரள மாநிலம் கண்ணூரில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் கடந்ததும் சர்வ சாதாரணமாக எழுந்து தள்ளாடியபடி போதை ஆசாமி சென்றார். எந்தவித காயமின்றி போதை ஆசாமி உயிர் தப்பினார்.
- 24 Dec 2024 10:37 AM IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பழைய பொருட்களுடன் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் எடைக்கு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் அரவைக்கு செல்லும் முன் ஆசிரியர்கள் விடைத்தாள்களை மீட்டனர்.
- 24 Dec 2024 10:29 AM IST
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.