23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Dec 2024 4:14 PM IST
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரத்து செய்கிறது. இறுதித்தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 23 Dec 2024 1:52 PM IST
தேர்தல் சட்டத்திருத்தம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
தேர்தலில் வெளிப்படைத்தன்மையை ஒழிக்கும் நோக்கில் பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது. ஆபத்தான சட்டத்திருத்தத்தால் மக்களாட்சி மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
- 23 Dec 2024 1:16 PM IST
நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி:-
மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள கேஸ்னந்த் பாடா பகுதிக்கு அருகே உள்ள சாலை நடைமேடையில் பல தொழிலாளர்கள் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற லாரி நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவரக்ள் மீது மோதியது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
- 23 Dec 2024 12:55 PM IST
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
- 23 Dec 2024 12:54 PM IST
தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக 84 வீரர், வீரங்கனைகளுக்கு பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- 23 Dec 2024 12:32 PM IST
அரசு ஊழியரின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை, ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
- 23 Dec 2024 12:29 PM IST
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
நினைவு தினத்தன்று ஒரு கி.மீ தூர நினைவு தின பேரணி நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளோம் என அண்ணா அறிவாலயத்தில் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.