சிவகங்கையில் ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருமலையில் சுப்பு என்பவர் தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள ஆடு, கோழியை திருட இன்று அதிகாலை மணிகண்டன், சிவசங்கரன் என்ற 2 பேர் வந்துள்ளனர்.
அப்போது, அங்கிருந்த கிராம மக்கள் சிலர் 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மணிகண்டன், சிவசங்கரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






