நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு


நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 20 Jan 2025 11:43 PM IST (Updated: 20 Jan 2025 11:44 PM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி நேற்று காலையில் ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கருங்கல்பாளையம் ஜீவாநகரில் வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று மாலையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவர்கள் உரிய அனுமதி பெறாமல் விதிமுறையை மீறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பறக்கும் படை அதிகாரி நவீன்குமார் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் இன்று காலை வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்சியினருடன் பிரசாரம் செய்தார். அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக சீதாலட்சுமி உள்பட 4 பேர் மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

1 More update

Next Story