சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்


சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 13 April 2025 9:23 AM IST (Updated: 13 April 2025 11:30 AM IST)
t-max-icont-min-icon

கடத்தலில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த சரண்ராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வரும் தன்பாத் விரைவு ரெயிலில் வாலிபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரில் சோதனை நடத்திய போலீசார், ஒடிசா மாநிலம் ராய்க்கடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த சரண்ராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சரண்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story