02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Jan 2025 6:28 PM IST
மேற்கு வங்காளத்தின் அமைதியை குலைக்க எல்லை பாதுகாப்பு படை முயற்சி; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தின் அமைதியை குலைக்க எல்லை பாதுகாப்பு படையினர் முயற்சிக்கிறார்கள் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, வங்காளதேசத்தில் இருந்து எல்லை பகுதிகள் வழியாக ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் நுழைய எல்லை பாதுகாப்பு படையினர் அனுமதித்து வருகின்றனர் என எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதற்கு பின்னால் மத்திய அரசின் திட்டம் உள்ளது. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
- 2 Jan 2025 5:29 PM IST
பிரபல பாடகர் அர்மான் மாலிக் தன்னுடைய நீண்டகால காதலியை கரம் பிடித்துள்ளார். இதனை தம்பதியாக அவர்கள் இருவரும் இன்று இன்ஸ்டாகிராம் வழியே அறிவித்துள்ளனர்.
- 2 Jan 2025 5:16 PM IST
சந்தோஷ் தேஷ்முக் படுகொலை பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
மும்பையில் மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறும்போது, சந்தோஷ் தேஷ்முக் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கு விரைவாக விசாரிக்கப்படும். இதற்காக கோர்ட்டில் அரசு வேண்டுகோள் வைக்கும். குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். பீட் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்த தேஷ்முக் (வயது 45), கடத்தி, சித்ரவதை செய்யப்பட்டு சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் பின்னணி உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
- 2 Jan 2025 4:42 PM IST
சிட்னி டெஸ்ட் போட்டி: ரோகித் சர்மா விலகல்; பும்ராவுக்கு வாய்ப்பு...?
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.
சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். இதனால் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது