'விஜய்யின் படம் வெற்றி பெறவும், மாநாடு சிறக்கவும் வாழ்த்துகிறோம்' - சீமான்
விஜய்யின் படம் வெற்றி பெறவும், கட்சியின் மாநாடு சிறக்கவும் வாழ்த்து தெரிவிப்பதாக சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டுக்கு வேண்டுமென்றே அனுமதி தர காலதாமதம் செய்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
"த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்பட 21 கேள்விகளை கேட்டு வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகளில் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டுதான் நடத்தினார்களா?
மாநாட்டை ஏற்பாடு செய்பவர்கள் அனைத்தையும் செய்வார்கள். அண்ணன்-தம்பி என்ற பாசத்தில் விஜய்யின் மாநாடு சிறக்க நான் வாழ்த்துகிறேன். அதேபோல், விஜய்யின் புதிய படம் வெளியாகிறது. படத்தை இயக்கியவரும், நடித்திருப்பவரும் எனது தம்பிகள்தான். படம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்."
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Related Tags :
Next Story