ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை மாநகர காவல் ஆணையர்


ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை மாநகர காவல் ஆணையர்
x
தினத்தந்தி 5 Sept 2024 6:52 PM IST (Updated: 5 Sept 2024 7:11 PM IST)
t-max-icont-min-icon

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டது. கொலைக்கான காரணம், முக்கிய நபர்கள் குறித்து விரைவில் தெரிவிப்போம். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 முக்கிய ரவுடிகள் பிடிபடவில்லை. சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கைதாவார்கள். ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது" என்று மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

1 More update

Next Story