தினமும் 2 ரவுடிகளை, காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் - காவல் ஆணையர் அருண்


தினமும் 2 ரவுடிகளை, காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் - காவல் ஆணையர் அருண்
x
தினத்தந்தி 15 July 2024 6:58 PM IST (Updated: 15 July 2024 7:23 PM IST)
t-max-icont-min-icon

காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார். அதில்,

"சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும். குறைந்தபட்சம் தினமும் இரண்டு ரவுடிகள் என்ற அடிப்படையில், ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.

தற்போது சரித்திரப் பதிவேட்டில் இருக்கும் ரவுடிகளை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், ரவுடிகளின் உறவினர்களுக்கு அறிவுரை தர வேண்டும். ரவுடிகள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும்.

நிபந்தனை ஜாமீனில் இருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், நிபந்தனைகளை மீறி செயல்பட்டாலோ, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தாலோ அவர்களின் ஜாமீன் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story