ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு: ம.நீ.ம. பொதுக்குழுவில் தீர்மானம்


ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு: ம.நீ.ம. பொதுக்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 21 Sept 2024 12:10 PM IST (Updated: 21 Sept 2024 4:59 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசனை தேர்வுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம், கமல்ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், உறுப்பினர்களான சினேகன், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2570 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்;

* மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசனை வாய்மொழியாக தேர்வுசெய்து தீர்மானம்

* ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவில் தீர்மானம்

* தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக பூத்திற்கு குறைந்தது 5 பேரை நியமிக்க வேண்டும்

* மக்கள் நீதி மய்யம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் பொதுக்குழுவில் தீர்மானம்

பொதுக்குழுவில் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பொதுக்குழு முடிவடைந்த பிறகு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story