வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்?


வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்?
x
தினத்தந்தி 23 Aug 2024 8:33 AM GMT (Updated: 23 Aug 2024 10:24 AM GMT)

பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.

தென்காசி,

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குற்றால அருவிகள் உள்ளன. இதில் பழைய குற்றாலம் அருவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிறுவன் ஒருவன் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 24 மணி நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று இருந்த அருவியில் நேர கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் இருந்தன. அதனை மெய்ப்பிக்கும் வண்ணமாக நேற்று காலை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட வனத்துறை அலுவலர் முருகன், உள்ளிட்ட குழுவினர் பழைய குற்றாலம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story