தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில்  குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 18 Aug 2024 10:51 AM IST (Updated: 18 Aug 2024 11:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

சென்னை,

ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக பரவிய குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டிலும் உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே அதன் பரவலையொட்டி உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

குரங்கம்மை நோய்த்தொற்றால் தமிழகத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அறிகுறி ஏதேனும் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும். என தெரிவித்துள்ளார் .


Next Story