தமிழகத்தையே உலுக்கிய விஷ சாராய விவகாரம்: 57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: மேலும் 20 பேர் கவலைக்கிடம்


தமிழகத்தையே உலுக்கிய விஷ சாராய விவகாரம்: 57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: மேலும் 20 பேர் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 23 Jun 2024 4:34 AM IST (Updated: 23 Jun 2024 11:13 AM IST)
t-max-icont-min-icon

நேற்று முன்தினம் வரை 40 போின் உடல்கள் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 18-ந்தேதி நள்ளிரவு முதல் 100-க்கும் மேற்பட்டோா் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்துள்ளனர்.

இதில் 19-ந்தேதி அதிகாலை முதல் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 19-ந்தேதி சிகிச்சை பலனின்றி 17 பேரும், 20-ந்தேதி சிகிச்சை பலனின்றி 24 பேரும், நேற்று முன்தினம் 9 பேரும் மொத்தம் 50 போ் உயிாிழந்தனா்.

இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறாா்.

விசாரணை ஒருபுறம் நடைபெற மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்களில் தினசரி சிலர் மரணத்தை தழுவி வருகிறார்கள். அந்த விதத்தில் நேற்று மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்னர். அதுபற்றிய விவரம் வருமாறு-

சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சோ்ந்தவா் முருகன் மகன் சுப்பிரமணியன் (வயது 42), இவா் கடந்த 19-ந்தேதி விஷ சாராயம் அருந்தி மயங்கியதாக தொிகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாக தொிகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையினா் மற்றும் போலீசாா் சுப்பிரமணியனை பல்வேறு இடங்களில் தேடிபாா்த்தனா்.

நேற்று காலையில் அவரது வீட்டுக்கு சென்று பாா்த்தபோது அவா் வீட்டில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது தொியவந்தது. இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினா் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுப்பிரமணியனை பாிசோதித்த டாக்டா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தொிவித்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேத பாிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.

இதேபோல் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சோ்ந்த மணி மகன் கல்யாணசுந்தரம் (43), மாதவச்சோியை சோ்ந்த கடந்தை மகன் கண்ணன் (55), கலியன் மகன் வீராசாமி (40), கருணாபுரத்தை சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பரமசிவம் (38) ஆகிய 4 போ் சிகிச்சை பலனின்றி உயிாிழந்தனா்.

இதன் மூலம் விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 57ஆக உயா்ந்துள்ளது.

நேற்று முன்தினம் வரை 40 போின் உடல்கள் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்றும் சிலரது உடல்கள் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று மாலை நிலவரப்படி 203 போ் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 31 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 3 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 55 போ் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளனா்.

இதுதவிர கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 97 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 30 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் சுமாா் 20 போின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகாிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தொிகிறது. மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 57போ் உயிாிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமல்லாது, தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story