வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு


வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
x
தினத்தந்தி 1 Oct 2024 6:37 AM IST (Updated: 1 Oct 2024 12:05 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து ரூ. 1,903 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 38 ரூபாய் விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

1 More update

Next Story