தொடர் மழை.. குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை


தொடர் மழை.. குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை
x
தினத்தந்தி 30 July 2024 5:27 AM IST (Updated: 30 July 2024 11:48 AM IST)
t-max-icont-min-icon

அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

தென்காசி,

குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசி வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

நேற்று இரவிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் 2-வது நாளாக தடை விதித்தனர்.


Next Story