தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் - கோவையில் அண்ணாமலை பேட்டி


தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் - கோவையில் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2024 5:41 AM GMT (Updated: 21 Jun 2024 7:06 AM GMT)

கோவை ஈஷா யோகா மையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

சென்னை,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

"கள்ளச்சாராய சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு நாம் தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யோகா மூலம் குடி பழக்கத்திலிருந்து பலரை மீட்டெடுக்கலாம். எனது மன அழுத்தத்திலிருந்து மீண்டு எழ எனக்கு யோகா முக்கியமாக இருக்கிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர முயன்றால் அது பிரச்சனையில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமே. கள்ளுக்கடை திறந்தாலும் அரசு கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தால் நல்லதுதான்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story