விடுமுறை எதிரொலி.. சொந்த ஊர் செல்லும் மக்களால் செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்


விடுமுறை எதிரொலி.. சொந்த ஊர் செல்லும் மக்களால் செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 15 Aug 2024 6:36 AM GMT (Updated: 15 Aug 2024 6:41 AM GMT)

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு,

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா இன்று(வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாடு முழுவதும் இன்று அரசு விடுமுறை. நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறைகள் வந்துவிடுகிறது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச் சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்து கடந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுங்கச் சாவடியில் கூடுதலாக ஒரு கவுண்டர் துவங்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதேபோல, பெரும்பாலான மின்சார ரெயில்கள் ரத்து காரணமாக, தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Next Story