தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்


தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்
x
தினத்தந்தி 22 July 2024 4:47 AM GMT (Updated: 22 July 2024 5:49 AM GMT)

433 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி இ, பி டெக், ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் அனுமதி வழங்கப்படாத நிலையில், 9 கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2024 -25-ம் கல்வி ஆண்டில் 433 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டைப் போலவே அதற்கு முந்தைய ஆண்டும் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.


Next Story