மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் வசந்தா எனும் மூதாட்டிக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் கடை உள்ளது. வசந்தாவிற்கு ஆண், பெண் என 6 பிள்ளைகள் உள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் வசந்தாவின் பெயரில் உள்ள சொத்தை ஈடாக பதிவு செய்து கொடுத்து குமார் என்பவரிடம் 10 லட்ச ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார்.
மாதந்தோறும் கடனுக்கு வட்டி செலுத்திய நிலையில் 1 ஆண்டுக்கு முன் கடன் கொடுத்த குமார் என்பவர் கூடுதலாக 15 லட்ச ரூபாய் பெற்று கொண்டு கடனுக்காக சொத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு வசந்தா மறுப்பு தெரிவித்த நிலையில் குமார், துணை மேயரின் தம்பி ராஜேந்திரன் உள்ளிடோர் வசந்தா மற்றும் அவரது மகன் முருகானந்தம் ஆகியோரை தாக்கி உள்ளனர்.
இந்நிலையில் வாங்கிய கடனுக்கு ஈடாக வீட்டை எழுதி தருமாறு மிரட்டியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.