சென்னை புறநகர் ரெயில்களில் நேற்று மட்டும் 3 லட்சம் பேர் பயணம்: தெற்கு ரெயில்வே


சென்னை புறநகர் ரெயில்களில் நேற்று மட்டும் 3 லட்சம் பேர் பயணம்: தெற்கு ரெயில்வே
x
தினத்தந்தி 7 Oct 2024 12:20 AM IST (Updated: 7 Oct 2024 6:10 AM IST)
t-max-icont-min-icon

மாலை 4.30 மணி நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்த பயணிகளை திறம்பட கையாள, சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் மற்றும் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு யு.டி.எஸ். செயலி மற்றும் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தி, அடிக்கடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் நாள்தோறும் சுமார் 55 ஆயிரம் பேர் ரெயிலில் பயணித்து வருகின்றனர். நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதனால், பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சிறப்பு ரெயில் இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தேவையான வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story