அதிவேகமாக இயக்கிய 30 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
நகர் பகுதியில் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய 30 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி
நகர் பகுதியில் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய 30 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
வேக கட்டுப்பாடு
புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி புதுவை கடற்கரை சாலை பகுதியில் மணிக்கு 20 கி.மீ. வேகமும், நகர பகுதியில் 30 கி.மீ. வேகமும், பைபாஸ் சாலைகளில் 50 கி.மீ. வேகத்திலும், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், மார்க்கெட் பகுதிகளில் 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.
அபராதம்
இதனை கண்காணிக்க புதுவை போக்குவரத்து போலீசாருக்கு 'ஸ்பீடு கன்கருவிகள்' (வாகனங்களில் வேகத்தை கண்காணிக்கும் நவீன கருவி) வாங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடகிருஷ்ணன், சிவக்குமார், ரங்கராஜன் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மறைமலையடிகள் சாலையில் வாகனங்களில் வேகத்தை கண்காணித்தனர். அப்போது சாலைகளில் அதிவேகமாக வந்த 30 வாகனங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.