வடகிழக்கு பருவ மழையால் கடல் சீற்றம்


வடகிழக்கு பருவ மழையால் கடல் சீற்றம்
x

வடகிழக்கு பருவ மழையால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி

புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கியது.இன்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்தது. சாலையில் சென்றவர்கள் மழையில் நனைந்த படி சென்றனர். கடற் கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் குடைபிடித்தபடி வலம் வந்தனர்.

புதுவை கடலும் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை ரோந்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். மழை விட்டு, விட்டு பெய்ததால் இரவு முழுவதும் இதமான சூழ்நிலை நிலவியது.

1 More update

Next Story