பாரதிதாசன் சிலைக்கு மரியாதை


பாரதிதாசன் சிலைக்கு மரியாதை
x

பாரதிதாசனின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி

பாரதிதாசனின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்சி ஆனந்து தலைமையில் வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது அவர்கள் பாரதிதாசன், நடிகர் விஜய் ஆகியோரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள். பாரதிதாசனின் பேரன் கோ.பாரதி, தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.


Next Story