ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்


ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்
x

காரைக்காலில் ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க மாநாடு காரைக்காலில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கையன், விவசாய மாநிலக்குழு உறுப்பினர்கள் தமிழரசன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய துணைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாநாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் போது, பாதிக்கப்பட்டாலோ, இறந்தாலோ அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். ரேஷன் கடைகளை திறந்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும். விவசாய நிலங்களை பாழ்படுத்தும் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story