கான்ட்ராக்டருக்கு பணம் வழங்காததால் புதுச்சேரி பொறியாளர் அலுவலகம் ஜப்தி
நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் அலுவலக வாசலில், ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு 15 கோடி ரூபாய் பாக்கி வைத்ததால், தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு உப்பனார் வாய்க்கால் மீது மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி, முடிக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனிடையே, அரசு வழங்க வேண்டிய பாக்கி தொகையை வழங்கக்கோரி, கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் வட்டியுடன் 15 கோடியே 39 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த தொகை வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் அலுவலக வாசலில், ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
Related Tags :
Next Story