டாக்டர் நளினிக்கு பத்மஸ்ரீ விருது

புதுவை ஜிப்மரில் ஹீமோபிலியா நோய்க்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட டாக்டர் நளினிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி
அரியவகை நோயான ஹீமோபிலியா நோய் பாதித்த குழந்தைகளுக்காக புதுச்சேரி டாக்டர் நளினி தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார். அவரை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்தது.
இந்தநிலையில் பத்மஸ்ரீ விருது வழங்கும் விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. விழாவில் டாக்டர் நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி, கவுரவித்தார்.
விருதுபெற்ற டாக்டர் நளினி புதுச்சேரி ஜிப்மரில் பயின்று அங்கேயே குழந்தைகள்நல மருத்துவராக பணியை தொடங்கினார். தற்போது ஹீமோபிலியா நோய் குறித்து பல்வேறு ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்தநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து விலை அதிகமாக உள்ளது. எனவே இந்த மருந்து விலை குறைவாகவும், தாராளமாகவும் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்தை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என டாக்டர் நளினி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.






