24 பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான ஆணை
மணவெளி தொகுதியை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான ஆணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி
புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ராஜீவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மணவெளி தொகுதியை சேர்ந்த குடும்ப தலைவரை இழந்த 24 குடும்பங்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் 22 குடும்பங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம், 2 குடும்பங்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கான ஆணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், விவசாய அணி சக்திபாலன், தவளக்குப்பம் கூட்டுறவு வேளாண் கடன் வழங்கும் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, தவளக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகர், ராஜா, தண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story