புதிய ஆழ்துளை கிணறு அமைப்பு


புதிய ஆழ்துளை கிணறு அமைப்பு
x

மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதி தவளக்குப்பம் லக்கம் அவன்யூ சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சிவானந்தம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், மேல்நிலைப் பொறியாளர் அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story