போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தேசியக்கொடி பறந்ததால் பரபரப்பு


போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தேசியக்கொடி பறந்ததால் பரபரப்பு
x

புதுவையில் ரோந்துக்கு பயன்படுத்தப்படும் போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தேசியக்கொடி பறந்ததால் பரபரப்பு

புதுச்சேரி

புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வருகின்றனர். அவர்கள் நள்ளிரவு வரை கடற்கரையில் காற்றுவாங்கி பொழுதை கழிக்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது மோட்டார் சைக்கிள் ரோந்து பணியையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோந்து பணி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக காவல்துறை சார்பில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கப்பட்டுள்ளது. அந்த மோட்டார் சைக்களில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு, சைரன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மோட்டார்சைக்கிளின் பின்புறத்தில் தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த மாதிரி மோட்டார் சைக்கிள் இன்று காவல்துறை தலைமையகத்துக்கு எடுத்துவரப்பட்டு போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் காண்பிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். அதை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்


Next Story