பருத்தி வயலில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி
காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் விவசாயிகள் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.
காரைக்கால்
நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் அறிவுறுத்தினர். இதை ஏற்று காரைக்கால் மாவட்டத்தில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் தங்களது வீடுகளிலும், அலுவலங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் விவசாயிகள் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். இதேபோல் பலரும் தங்கள் வயல்களில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர். வயல்களில் பட்டொளி வீசி தேசியக்கொடி பறப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
Related Tags :
Next Story