ஜி20 லோகோ வரைந்த மாணவிகளுக்கு பாராட்டு


ஜி20 லோகோ வரைந்த மாணவிகளுக்கு பாராட்டு
x

அரியாங்குப்பத்தில் 52 ஆயிரம் சதுர அடியில் ஜி20 லோகோ வரைந்த மாணவிகளை சபாநாயகர் செல்வம் பாராட்டினார்.

அரியாங்குப்பம்

ஜி20 மாநாட்டுக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. இதையொட்டி தொடக்க மாநாடு புதுச்சேரியில் நடந்தது. இந்த நிலையில் ஜி20 மாநாட்டை வரவேற்கும் விதமாக விழிகள் அறக்கட்டளை சார்பில், புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜி20 லோகாவை பிரமாண்டமாக வரையும் நிகழ்ச்சி நடந்தது.

சேலம் தனியார் பள்ளியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி கவுசிகா, புதுச்சேரி தனியார் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி வாணிஸ்ரீ ஆகியோர் இணைந்து சுமார் 52 ஆயிரம் சதுர அடியில் 3,500 கிலோ கலர் கோலமாவுகளை கொண்டு 20 மணி நேரம் பிரமாண்டமாக வரைந்தனர்.

இதையடுத்து அந்த மாணவிகளை சபாநாயகர் செல்வம் பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை விழிகள் அறக்கட்டளை நிறுவனர் பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா ஆகியோர் செய்திருந்த்தனர்.


Next Story