அடிப்படை வசதி இல்லாத காரைக்கால் ரெயில் நிலையம்


காரைக்கால் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

காரைக்கால்

காரைக்கால் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

காரைக்கால் ரெயில் நிலையம்

காரைக்கால் கடற்கரை செல்லும் பாதையில் ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இது டெல்டா மாவட்டத்தின் கடைசி ரெயில் நிலையமாகும். அதனால், ஏராளமான பயணிகள் தினமும், காரைக்கால் வந்து செல்கின்றனர். 3 பிளாட்பாரத்தை கொண்ட இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளின் தாகத்தை போக்க, 30-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.

காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையமும் அமைத்து கொடுக்கப்பட்டது. நாளடைவில் அவற்றை சரியாக பராமரிக்காததால் பழுதாகி காட்சிப்பொருளாக உள்ளது. குடிநீர் குழாயை திறந்தால் காற்று தான் வருகிறது. தண்ணீர் பிடிக்கும் இடம் அசுத்தமாக காட்சியளிக்கிறது.

அடிப்படை வசதிகள்

குடிநீர் குழாய் தொட்டிகளில் துைடப்பம் மற்றும் குப்பைகள் பயணிகளை முகம் சுளிக்கும் வகையில் கிடக்கிறது. பெயருக்கு ஒரேயொரு குடிநீர் குழாய் மட்டும் செயல்படுவது பயணிகளுக்கு சற்று நிம்மதியை தருகிறது.

அதேபோல் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறையும் பல மாதங்களாக மூடிக் கிடக்கிறது. அதனால் பயணிகள் ரெயில் ஓரங்களை, பொது இடங்களை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.

எனவே பயணிகளின் நலன்கருதி ரெயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

1 More update

Next Story