குப்பைகள் அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்


குப்பைகள் அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்
x

குப்பைகள் அகற்றாவிட்டால் புகார் தெரிவிக்க இலவச எண்ணை உழவர்கரை நகராட்சி ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்.

புதுச்சேரி

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை மற்றும் புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக குப்பைகளை சேகரித்து அவற்றை குரும்பாபேட் குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்வதற்கு ஸ்வச்தா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி குப்பை பெற ஊழியர்கள் சரியாக வரவில்லை என்றாலோ, குப்பைத்தோட்டிகளில் உரிய நேரத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தாலோ, குப்பை தொட்டிகள் தொடர்பான அனைத்து புகார்களையும் 18004255119 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 7358391404 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி சாலைகள், குப்பைத்தொட்டிகளின் அருகில் போடாமல் வீட்டிலேயே வைத்து நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து குப்பை வண்டி மூலம் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண் 0413-2200382 மற்றும் 7598171674 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story