இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்
சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்று மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.
புதுச்சேரி
சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்று மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.
கருத்தரங்கு
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் தமிழ் பேரவை மற்றும் யுனிட்டி பவுண்டேசன் சார்பில் சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. யுனிட்டி பவுண்டேசன் நிர்வாகிகள் ஆகாஷ் சாம்ராஜ், சுதர்சன் ஆகியோர் நோக்கவுரையாற்றினர். தமிழ்துறை தலைவர் மாலதி வரவேற்றார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கலந்துகொண்டு சாலை விதிகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்' என்றார்.
இந்த கருத்தரங்கில் கல்லூரி மாணவர்கள், சமூக சேவகர் ஆம்புலன்ஸ் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் அரங்க.முருகன் நன்றி கூறினார்.