ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விழிப்புணர்வு நடைபயணம்


ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விழிப்புணர்வு நடைபயணம்
x

மத்திய அரசின் ‘எனது பில் எனது அதிகாரம்’ என்கிற திட்டம் தொடர்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.

புதுச்சேரி

மத்திய அரசின் 'எனது பில் எனது அதிகாரம்' என்கிற திட்டம் ஒரு செயலியை வடிவைமத்துள்ளது. விற்பனையாளர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கும், சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்பட்ட (ஜி.எஸ்.டி.) பொருள்களுக்கான பில்லை மறக்காமல் வாங்கி, அதை இந்த செயலயில் பதிவேற்றுவதன் மூலம் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், முதல் கட்டமாக வருகிற 1-ந் தேதி அசாம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களான தாத்ரா நகர் ஹவேலி, டாமன் அண்ட் டையூ, புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வு நடைபயணம் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்தது. இதனை ஜி.எஸ்.டி. ஆணையர் ஸ்ரீமதி பத்மஸ்ரீ கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். கூடுதல் ஆணையர்கள் சஞ்சீவ் பட்னாகர், பிரசாந்த் குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடைபயணம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் அருகில் முடிவடைந்தது.


Next Story