அரசு மருத்துவமனையில் மரபணு ஆய்வகம்


அரசு மருத்துவமனையில் மரபணு ஆய்வகம்
x

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மரபணு ஆய்வகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்துவைத்தார்.

புதுச்சேரி

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மரபணு ஆய்வகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்துவைத்தார்.

மரபணு ஆய்வகம்

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.56 கோடி செலவில் மரபணு வரிசை முறை ஆய்வகம் புதியதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா இன்று நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மருத்துவக்கல்லூரி இயக்குனர் உதயசங்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ், மைக்ரோபயாலஜி துறை தலைவர் நந்திதா பனாஜி, பொறுப்பு அதிகாரி ஸ்ரீநிவாசன், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

2 நாட்களில் முடிவு

இந்த ஆய்வகத்தில், வைரஸ்களின் உருமாற்றங்கள் குறித்து கண்டறியலாம். அதாவது கொரோனா புதிய வைரஸ் குறித்தும் கண்டறியலாம். இதுபோன்ற சோதனைக்கு கடந்த காலங்களில் மாதிரிகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் முடிவு கிடைக்க 10 முதல் 15 நாட்கள் வரை ஆனது. ஆனால் இப்போது 2 முதல் 3 நாட்களில் பரிசோதனை முடிவுகளை அறியலாம்.

மேலும் இந்த ஆய்வகத்தில் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம். இதுதான் புதுவையில் அமைக்கப்பட்ட முதல் மரபணு ஆய்வகம் ஆகும்.


Next Story