அறுவடை செய்த நெல்லை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்
புதுவையில் திடீர் மழையால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் சாலையில் உலர வைத்தனர்.
பாகூர்
புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் சொர்ணாவாரி நெல் பயிர் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்தால் விளைந்த நெல்மணிகள் வயலில் உதிர்ந்துவிடும் என்பதால் விவசாயிகள் அறுவடையை தீவிரப்படுத்தினர். ஏக்கருக்கு சுமார் 40 மூட்டை கிடைக்க வேண்டிய நிலையில், மழை காரணமாக 35 மூட்டைக்கும் கீழ் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த ஈரமான நெல்லை பாகூர் பிள்ளையார்கோவில் சந்திப்பில் சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். காய்ந்த பின்னர் அவற்றை மூட்டை கட்டி வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story