நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழர்களுக்கு பெருமை


நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழர்களுக்கு பெருமை
x

நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழர்களுக்கு பெருமை என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

நீதி வழுவாத ஆட்சி முறையின் அடையாளமே செங்கோல். அன்றைய தமிழர்களின் நீதி பரிபாலன முறையை உலகத்துக்கே வழிகாட்டக்கூடியதாக அமைந்திருந்தது. திருக்குறளில் வரும் செங்கோன்மை அதிகாரம் தமிழர்களின் நீதி வழுவாத ஆட்சி முறையையும், நிர்வாகத்தையும் அழகாக எடுத்து உணர்த்தும்.

அதனால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் அரசாட்சி நீதி வழுவாமல் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி இரவு அன்றைய பிரதமருக்கு செங்கோல் கைமாற்றப்பட்டது. தமிழகத்தில் திருவாடுதுறை ஆதினத்தை சேர்ந்த பெரியோர்களால் செய்யப்பட்ட செங்கோல் வழங்கப்பட்டது என்பது தமிழர்களின் சிறப்பு.

அன்றைய நிகழ்வை பின்பற்றி இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகத்தில் செய்யப்பட்ட தமிழர்களின் பரிபாலன முறையின் அடையாளமான செங்கோலை நிறுவுகிறார் என்பது தமிழர்களுக்கு பெருமை. அதற்காக பிரதமருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story